சென்னை: 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மீண்டும் எம்.எஸ்.தோனி விளையாடுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதற்காக அணி நிர்வாகம் தல தோனியை ரூ.4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் மவுசு உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களும் பெரும் பேரு அடைவதுடன், அடுத்தடுத்து இந்திய அணிகளும் சேர்ந்து, உலக போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறுகின்றனர். அதே வேளையில், இந்திய அணிகள் தங்களது அணிகளுக்காக விளையாட உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களையும் ஏலம் எடுத்து விளையாட்டை, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2025 தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.  இதையொட்டி,  இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும், ஏற்கனவே விளையாடி வரும் வீரர்களில்  5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள நிர்வாகம்  அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இவ்வாறு  தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் (இன்று) தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இதைத்தொடர்ந்து அணி நிர்வாகத்தினர், எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை இசையமைப்பாளர் அனிருத்தின் இசையுடன் வெளியிட்டுள்ளது. அதன்படி, தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா தலா ரூ.18 கோடிக்கும், மதீஷா பதிரனா ரூ.13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும், தோனி ரூ.4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

தோனியை Uncapped பிளேயராக சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. இதன்மூலம் தோனி இந்த ஆண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது உறுதியானது.