சென்னை:  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவ.6-ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுடன் இந்த முறை புதிதாக தொடங்கியுள்ள நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக்கழகமும் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளது. இதனால் கடும் போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதையொட்டி, திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில்,  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் .6-ம் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6, காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]