சென்னை: தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளின் சுமார் 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் ரயில்களுடன் பல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. அதுபோல ஏராளமான ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டனர். இதன் மூலம் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து ம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சில விமானங்களிலும் சென்று இருக்கின்றனர்.
சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், நாளை முதல் திரும்ப தொடங்குவார்கள். இதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதுடன், சிறப்பு மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
சிறப்பு பேருந்துகள் அனைத்தும், சென்னை கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்படும் என்பதால், பொதுமக்கள் வசதிக்காக கிளாம்பாக்கம் அருகே உள்ள பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையங்களில் இருந்த சிறப்பு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் இயக்கப்படும் என்பதால், அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக திங்கள்கிழமை அதிகாலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரெயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகாமையிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரயில்கள் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.