மேஷம்

இந்த வாரம் திருமண முயற்சிகளில் கவனம் செலுத்துவீங்க.தக்க துணையை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீங்க. எதிரிகள் மீது வெற்றி காண வேண்டும் என்ற கவலை இருக்கலாம். வாகனம் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். பயனற்ற பயணங்கள் காரணமா டென்ஷனாவீங்க… பட் பிற்காலத்துல இதன் பலன் உங்களை ஹாப்பியாக்கும். எதிர்பாராத நிகழ்வுகள் சந்தோஷத்துக்குக் காரணமாகும். உங்கள் கடந்த கால செயல்கள் மூலம் அதிர்ஷ்டம் கூடும். முதலீடு மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்டுவீங்க. உங்கள் கடன் தொகை கணிசமாகக் குறையும். இந்த வாரம் உங்கள் நிதிநிலை மேம்படும். பல்வேறு ஆதாரங்கள் மூலம் பண வரவு இருக்கும். கூட்டுத் தொழில் இந்த வாரம் வெற்றிகரமா நடக்கும். ஒங்க பேச்சின் மூலம் நல்ல விஷயங்கள் மற்றும் சுப விஷயங்கள் அல்லது லாபங்கள் ஃபைனலைஸ் ஆகும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 2 முதல் நவம்பர் 5 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

காதல் மற்றும் உறவு விவகாரங்களில் இந்த வாரம் மாற்றம் இருக்கும். நீங்கள் உற்சாகமாக இருப்பீங்க. ஆற்றலுடன் காணப்படுவீங்க. மனசார உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீங்க. உங்களோட உண்மைத் தன்மை உங்களை உயர்த்திடும். அலுவலக சம்பந்தமான பயணங்கள் மூலம் பாராட்டு.. அவார்ட்.. ரிவார்ட்.. பரிசு கெடைக்க சான்ஸ் இருக்கு. உங்க வாழ்வில் புதிய துணை வரலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே புரிந்துணர்வு மேம்படும். உங்கள மனசுல காதல் பொங்கி வழியும்.உங்க உறவினர்கள் மற்றும் தந்தைக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீங்க. பட்.. அது பத்தி சந்தோஷம்தான் படுவீங்க. வருத்தம் நஹி. தொழில் செய்யறவங்க இந்த வாரம் தங்கள் நடவடிக்கைகளில் சாதகமான பலன்களைக் காண முடியும்.மேலாண்மை நுட்பங்களில் மாற்றம் இருக்கும். மனசுல உற்சாகம் பொங்கும். பிடிச்சவங்களோட பேசுவீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 5 முதல் நவம்பர் 7 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

ஆரோக்கியம் மேம்படும். மன அமைதிக்கு வழிவகுக்கும், ஆனால் அடிக்கடி பயணம் செய்வதால் உடல் அசதி ஏற்படலாம். இந்த வாரம் பழைய நோய்கள் மற்றும் காயங்களால் ஏற்படும் வலிகள் நீங்கும். காயம்னா… உடல் காயம் மனக்காயம் ரெண்டும்தாங்க. தொழில் சார்ந்த கடன்கள் குறையும். வாடிக்கையாளர்களின் வட்டம் விரிவடையும். உங்க உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். பணியிடத்தில் பதற்றங்கள் குறையலாம். நீங்க கடினமாக உழைக்கலாம். உங்களுக்கு அங்கீகாரம் கிட்டலாம். ஒரு சிலருக்கு இடமாற்றம் மூலம் ஆதாயம் கிட்டும். ஒரு சிலருக்கு புதிய வேலை கிட்டும். அது லாபகரமானதாக இருக்கும். நீங்க தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொள்ளளலாம். அவங்களோட கருத்துகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிட்டாது. அது பத்தி ஒர்ரி பண்ணிக்காதீங்கப்பா…இது தற்காலிகமானதுதான்

கடகம்

இந்த வாரம் மாணவர்கள் சிறப்பாக செயலாற்றுவாங்க. ஆர்வத்துடன் கல்வி பயில்வாங்க. அவங்களோட தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும். நீங்க வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம். உங்க சுற்றுச் சூழலில் அமைதி நிறைந்து இருக்கும். உங்க அறிவை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீங்க. ஒரு சிலர் மந்திரம் ஜெபித்தல் மற்றும் பிற ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட சான்ஸ் இருக்கு. இதுக்கெல்லாம் உதவிகரமா இருக்கக்கூடிய ஒரு பயணம் போகவும் சான்ஸ் இருக்கு. நீங்க உறவுகளை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீங்க. உங்க அன்பை வெளிப்படுத்துவதில் வெற்றி காண்பீங்க. உங்க வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவை பராமரிப்பீங்க. மற்றும் அவர் மூலம் ஆதாயம் காண்பீங்க. ஆரோக்கியத்தில் சூப்பரா கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டீங்க. கங்கிராட்ஸ்.

சிம்மம்

உங்க வாழ்க்கைத் துணை அல்லது கூட்டாளி தங்கள் தொழிலில் சில தடைகளை சந்திக்கலாம். பட்.. அதிலிருந்து அவங்களை வெளியே கொண்டு வர்றதுக்கு நீங்க உதவிகரமா இருப்பீங்க. இதனால இரண்டு வித நன்மைகள். ஒண்ணு.. அவங்களுக்கு நிம்மதி.. ரெண்டு உங்க மேல அன்பும் காதலும் நன்றியும் வெளிப்பட்டு .. தாம்பத்யம் அல்லது நட்பில் நெருக்கம் மேம்படும். மொத்தத்தில் இந்த வாரம் உறவில் மகிழ்ச்சி காணப்படும். உங்க குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துவீங்க. வசதியாக வீட்டை பராமரிக்க உங்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீங்க. இந்தவாரம் அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருக்கும். பங்கு வர்த்தகம் மற்றும் ட்ரேடிங் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கலாம். உடன் பிறந்தவர்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்காக நீங்க பணத்தை செலவு செய்யப் போறீங்க. சகோதர சகோதரி ஒற்றுமை இன்கிரீஸ் ஆகுங்க.

கன்னி

நிதிநிலைமையைப் பொருத்த வரைக்கும்… நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வகையில் செலவுகள் இருக்கும். உங்க தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படுங்க,  அதனால மனசுல நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையோட ஃபைட்டிங் சீன் வேணாங்க. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி காண்பாங்க. கூடுதல் தகுதி பெறவும் கல்வியில் முன்னேற்றம் காணவும் அவங்க மென் திறன் மற்றும் சான்றிதழ் கல்விகளை படிக்க வாய்ப்பிருக்கு. மனசுல தீய எண்ணங்களை விதைக்கறதுக்கு யாராவது முயற்சி செய்தா அவங்களை கட் செய்துடுங்க. தவிரவும் விரக்தி உள்ளே போக விடாம மனசுல பூட்டுப் போட்டுடுங்க. வேலை அண்ட் உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது அனுகூலமான காலக்கட்டாமாக இருக்கும். தொழிலில் சூப்பர் முன்னேற்றம் பிளஸ் புகழ் உண்டுங்க.

துலாம்

இந்த வாரம் ஆரம்பத்தில் உங்க நீண்ட நாள் விருப்பமாக இருந்த ஊதிய உயர்வு மற்றும் சம்பள உயர்வு கெடைக்க சான்ஸ் இருக்கு. இந்த வாரத்தின் இரண்டாம் பாதியில் உங்க உத்தியோகத்தில் சில மாற்றங்களை நீங்க காணலாம். தகவல் பரிமாற்றத்தின் போது நீங்க விவேகத்துடன் செயல்படுவீங்க. பணியிடச் சூழல் வசதியாக இருக்கும். தரகுத் தொகை மற்றும் போனஸ் வகையில் உங்களுக்கு பண வரவு இருக்கும். உங்க தொழிலில் சாதகமான பலன்களைப் பெறலாம். முதலீடுகள் மூலம் நல்ல பணவரவு இருக்கும். தலைமைப் பொறுப்பு மற்றும் வழகாட்டுதலில் நீங்க சிறந்து விளங்கினாலும் சில சவாலகளை சந்திச்சு அதுலேயிருந்து நல்லவங்க உதவியோட வெளியே வந்து நிமிர்ந்துடுவீங்க. ஆபீஸ்ல ஒங்க செயல்பாடுகள் பாராட்டை சம்பாதிச்சுத் தரும். மனசுக்குப் பிடிச்ச உறவுக்காரக்ளை சந்திச்சு சந்தோஷமா சிரிச்சுப் பேசுவீங்க.

விருச்சிகம்

தொழிலில் புதிய உத்திகளை புகுத்துவதில் நீங்க வெற்றி காணலாம். தொழில் கூட்டாளிகள் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சீராக இருக்கும். மேலும் பலர் நாள்பட்ட நோய்களிலிருந்து மீண்டு வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் இந்த வாரம் அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும். உங்க கம்யூனிகேஷன் திறன் மேம்படும். இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் புத்திசாலித்தனம் மூலம் நீங்க கல்வியில் அங்கீகாரம் மற்றும் வெற்றி பெறலாம். உங்க சிந்தனை சார்ந்த விஷயங்களில் நீங்க சவால்களை சந்திக்க நேரலாம். பெரும்பாலான மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணுவீங்க. வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை அமையும். உங்க மனசில் அமைதி நிறைந்து இருக்கும். உங்க குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துவீங்க. வசதியாக வீட்டுக்குக் குடி போவீங்க. வாழ்க்கைல முன்னேற உங்க புத்திசாலித்தனத்தை  யூஸ் பண்ணுவீங்க. இந்தவாரம் அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருக்கும்.

தனுசு

குடும்பத்தோட தேவைங்களைப் பூர்த்தி செய்வீங்க. புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மனசுல தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை குடும்பத்துல மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அவங்களால ஒரு சுப நிகழ்ச்சி முடிவாக சான்ஸ் இருக்கு. ஆபீஸ்ல சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். ஒங்களோட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. ஆனாலும் இப்போ நீங்க செய்யற முயற்சிங்களும் உழைக்கற உழைப்பும் உங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும். நண்பர்கள் அட்வைஸ் நன்மை தரும். பேச்சுல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. நல்லதே நடக்கும்.

மகரம்

வீண் வழக்கு விவகாரங்கள் வந்தா, நல்லவங்களோட அட்வைஸ் கேட்டு நடங்க. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வர சான்ஸ் இருக்கு. ஏத்துக்குங்க. உடனடியா பெரிய நன்மைகளோ பலனோ இல்லாட்டியும் நீண்ட காலத்துக்கு உதவக்கூடிய சமாச்சாரம் அது. மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீங்க. சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பர்சனல்  விஷயங்களை யார் கிட்டயும் பகிர வேணாம். மகன்/ மகள் லைஃபில் பெரிய சந்தோஷத் திருப்பம் இருக்கும். ஈன்ற பொழுதில் பெரிதுவப்பீங்க. பயணம் செய்வதன் மூலம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உடனே நீங்கும். ஆபீசில் அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீங்க. அடுத்தவர் யோசனைகளை கேட்டுக்குங்க. எது சரி எது தவறான யோசனைன்னு தீர ஆலோசிச்சு அதைப் பின்பற்றலாமே வேணாமான்னு டிஸைட் பண்ணுங்க. தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பாங்க. ஆபீஸ்ல இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கெடைக்கும். குடும்பத்துல  இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீங்க. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீங்க. எதிலும் நிதானப்போக்கு இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

மீனம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். செயல் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தை செய்து முடிப்பீங்க. இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். யாரைப் பத்தியும் யார் கிட்டயும் கமென்ட் எதுவும் செய்துடாதீங்க. வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கெடைக்கும். குடும்பத்துல  மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்பட சான்ஸ் இருக்குங்க, ஆனா எல்லாமே சந்தோஷம் தரும் எக்ஸ்பென்ஸஸ்தான்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.