சென்னை
உச்சநீதிமன்ற தடை உத்தரவை மீற் பட்டாசு வெடிட்தால் வழக்கு பதியப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதா. நாளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயினும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட நேரங்களிலும் பட்டாசு வெடிக்கப்படுகிறது
இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“உச்சநிதிமன்ற உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது.
தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
கடந்த 2023-ம் ஆண்டு கனம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது”
எனக் கூறப்பட்டுள்ளது.