கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஆட்டோ டிரைவரான ரேணுகாசாமி, கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி பெங்களூரில் உள்ள மேம்பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நடிகர் தர்ஷனின் ரசிகரான ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் காதலியும் நடிகையுமான பார்வதி கௌடா குறித்து சமூகவலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷன் கூலிப்படையினரை ஏவி ரேணுகாசாமியை கொடூரமான முறையில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கின் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பெல்லாரி சிறையில் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள தர்ஷன் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விஸ்வஜித் ஷெட்டி தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு இன்று இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
காலையில் விசாரணை தொடங்கிய உடனேயே பெஞ்ச் இந்த உத்தரவை அறிவித்தது.
இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், பி.பிரசன்னகுமார் ஆகியோர் தர்ஷன் தரப்பில் வாதிட்டனர்.
தர்ஷன் இடைக்கால ஜாமீனுக்கான நிபந்தனைகள் என்ன?
* அறுவை சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ உதவியின் அடிப்படையில் இந்த இடைக்கால ஜாமீன் ஆறு வாரங்களுக்கு செல்லுபடியாகும்.
* தர்ஷன் முதுகுத் தண்டு பிரச்னைக்கு அவர் விரும்பும் எந்த மருத்துவமனையிலும் உடனடியாக சிகிச்சை பெறலாம்.
* தர்ஷன் தனது பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* உடல்நிலை, முன்மொழியப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் மற்றும் அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்