இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் அரச விடுமுறை கிடைத்துள்ளது. இதனார்ல் சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். இதன் காரணமாக, கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.எ அதன்படி, சென்னையில் இருந்து அக்டோபர் 28ந்தேதி இரவு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 14ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை பயணிகளின் வசதிக்காக மட்டும் 11,176 சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அதன்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூா், திருச்சி, சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூா் வழி செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள்.
மாதவரம் பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள். உதவி எண்கள் பிரத்யேக உதவி எண்கள் : 7845700557, 7845727920, 7845740924. அரசுப் பேருந்துகள் விவரம், புகாா் – 94450 14436 ஆம்னி பேருந்துகள் புகாா் – 044 2474 9002, 2628 0445, 2628 1611