சென்னை
ஆம்னி பேருந்து கட்டணம் தீபாவளியையொட்டி பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தீபாவளி பண்டிகையை யொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரயில் மற்றும் அரசு பேருந்துக்ளில் உடனடியாக டிக்கெட் காலியாகிவிடுவதால் இவர் ஆம்னி பேருந்துகளை நாடிச்செல்கிறார்கள்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. அரசு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாலும் கூட, அதையும் பொருட்படுத்தால் பலமடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்விடுமுறை வருவதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் மிகவும் உயர்ந்துள்ளது. மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.