சென்னை
நேற்று வெளியான தமிழக அரசின் பணியாளர் தேர்வு முடிவுகைளுக்கு பின் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தியது.
இதற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்த் 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன.
நேற்று குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நேற்று காலை தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்று கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9, 491 ஆக அதிகரித்துள்ளது.