விக்கிரவாண்டி

வெ க மாநாட்டுக்குயாரும் இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் என நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. இது முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

இன்று நடிக்ர் விஜய் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இது கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தொண்டர்கள் இன்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டிற்கு வர தொடங்கி விட்டனர் . நடிக்ர், மாநாட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் யாரும் வர வேண்டாம் என தொண்டர்களுக்கு விஜய் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார் . மேலும் குழந்தைகள், சிறுவர்களை மாநாட்டிற்கு யாரும் அழைத்து வர வேண்டாம் எனவும் கர்ப்பிணிகள், முதியோர் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் விஜய் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.