மேஷம்
குடும்பத்துல உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவாங்க. சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு சான்ஸ் உண்டுங்க. பிள்ளைங்களால மகிழ்ச்சி உண்டாகும். மேலதிகாரிங்க கிட்ட வாக்கு வாதத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அலுவலகவாசிகள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தருமுங்க. பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் உள்ளவங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயார் பற்றிய டென்ஷன்கள் இருந்துக்கிட்டிருக்கும். ஆனால் பிரச்சனை பெரிதாகாதுங்க.
ரிஷபம்
இதுவரை மறைந்திருந்த ஒங்களோட திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கெடைக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கெடைக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ் வீங்க. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும். வழக்குகளில் அவசரம் தவிர்க்கவும். துடிப்பும் தவிப்பும் இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். பல்லைக் கடிச்சுக்கிட்டு கொஞ்சம் பொறுமையா இருந்துடுங்க. ப்ளீஸ். சமூகத்தில் உங்க அந்தஸ்து உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். தந்தை வழியில் நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். அலுவலகத்தில் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் கிடைக்கும். மனசில் உற்சாகம் பீறிடும்படியான ஒரு குழுவுடன் இணைந்து செயல்படுவீங்க.
மிதுனம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைங்க பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணவரவு ஓரளவுதான் திருப்திகரமா இருக்கும். சிறிய பயணங்கள் ஓரளவு சாதகமான பலன் தரலாம். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் ஓரளவே இருக்கும். தொழில் தொடர்பான செலவும் கூடும். யாரிடமுமே வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு, சென்ற ஆண்டைவிடவும் சிறப்பான வாரமா இருக்கும். தாமதமாகி வந்த மற்றும் தட்டிப்போன வாய்ப்புகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும்.
கடகம்
ஆபீஸ்ல திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீங்க. கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மாணவர்களுக்கு மேல்படிப்பு பற்றி உறுதியாக முடிவாகும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் தடைநீங்கிப் புதிய வாய்ப்புகளைப் பெறுவீங்க. உறவினரிடம் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். பொறுப்பு அதிகரிக்கும். சம்பளம் உயரச் சற்று பொறுங்க. விருப்பத்திற்கு மாறா எதுவும் நடந்துடாதுங்க. பயப்படாதீங்க. பகைவர்களை வென்று நிம்மதி பெறுவீங்க. எதிர்ப்புகள் அகலும். பழைய நண்பரைச் சந்திப்பீங்க
சிம்மம்
வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பயணத்தின்போது கைப்பொருள்கள் மீது கவனம் தேவை.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளைச் சமாளிப்பதற்குத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப் பதற்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பெண்கள் தங்களுக்கிட்ட வேலைகளைத் திறம்படச் செய்து முடித்து நல்ல பெயரும் பாராட்டும் பெறுவீங்க. தொலை தூர தகவல்கள் நிம்மதியளிக்கும். பயணம் செல்லும் தேதி கன்ஃபர்ம் ஆகும்.
கன்னி
சந்தோஷத்துக்கும் வருமானத்துக்கும் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைங்கவழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. ஆபீஸ்ல சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் அடையும். அடுத்தவங்களுக்காக உதவி செய்வது மற்றும் அவங்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கேர்ஃபுல்லா இருங்க. அதற்கான பாராட்டு எதையும் எதிர்பார்க்க வேண்டாம். சகோதர சகோதரிங்க ஒருத்தருக்கொருத்தர் ஒற்றுமையா சந்தோஷமா இருப்பீங்க
துலாம்
குடும்பத்துல கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனசுல பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி ஏற்றம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். நற்பெயர் கெடைக்கும். உங்க பொருட்களை ரொம்பவும் கவனமாப் பார்த்துக்குங்க. இந்த வாரம் வீண் தேவையே இல்லாத விஷயங்களில் வீண் குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லதுங்க. பணவரவு இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். ரெடியா இருங்க. எங்கும் எதிலும கவனமாய்ச் செயல்படுங்க.
விருச்சிகம்
உங்களுக்கு இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கெடைக்கும். எதிலும் லாபம் கெடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பாங்க. கற்பனை பயம் காரணமா சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கெடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணத்திட்டங்களைத் தள்ளிப்போடுவீங்க. அது நல்லதுக்குதாங்க. அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.
தனுசு
குடும்பத்துல திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மனவலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கெடைக்கும். தொழில் வியாபாரத்துல இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும். மத்தவங்களுக்கு உங்க மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்குள்ள பலரும் உங்களைத் தேடி வருவாங்க. அடுத்தவங்களுக்காக ஹெல்ப் செய்வதில் உற்சாகம் உண்டாகும்
சந்திராஷ்டமம் : அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
குடும்பத்துல நடைபெறும் சில விஷயங்கள் ஒங்களோட கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடம் நீங்க சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். பர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கணுங்க. குடும்ப ஹெல்த் பற்றி கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த யுத்தம் நிற்கும். விருந்து நிகழ்ச்சிகள் ஏமாற்றம் அளிக்கும். உறவினரிடைய மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்குமுங்க.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 26 முதல் அக்டோபர் 28 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவாங்க. முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்துல இருந்த போட்டிகள் அகலும். ஆபீஸ்ல இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீங்க. குடும்பத்துல இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவங்களால அதிகப்படி வருமானம் வரும். கணவன், மனைவிக்கிடையே நட்புணர்வு மிக்க உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீங்க. தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. மனசுல இருந்துக்கிட்டிருந்த பயங்கள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 28 முதல் அக்டோபர் 31 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
திடீர் கோபங்கள் உண்டாகலாம். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீங்க. அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப் படுவாங்க. முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கெடைக்கும். இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீங்க. அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கெடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீங்க. தேவையான நிதியுதவி கெடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீங்க. வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.குழந்தைங்க வசிக்கும் ஊருக்குப் போவீங்க. மனசுல இருந்த பயங்களும் கவலைங்களும் கடுகு சைஸுக்கு மாறி, சந்தோஷம் விஸ்வரூபமாகும்.