சென்னை: போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

தமிழத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளது. இருந்தாலும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.  அதுபோல எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.   போதை பழக்கவழக்கங்களால்  பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்

ஆனால்,  போதைபொருள் விற்பனையில் அரசியல் கட்சி நிர்வாகிகளே ஈடுபடுவதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.  ஆனால்,  இதனை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் , போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்றும், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடி கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்றும், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்று தெரிவித்துள்ளார்.