சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 குறைந்தது.

நேற்று கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7340க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு ரூ. 440 குறைந்து ஒரு கிராம் ரூ. 7285க்கும் சவரனுக்கு ரூ. 58,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது சாமானிய மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 110க்கு விற்பனை செய்யப்படுகிறது.