ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவைச்சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர் உள்பட பலர், பாஜகவில் இருந்து விலகி, ஹேமந்த் சோரன் கட்சியில் இணைந்துள்ளனர். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹேமந்த் சோரன் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சாம்பாய் சோரன் உள்பட  பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், நடைபெற உள்ள தேர்தலிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்,  பாஜகரவைச் சேர்ந்த பல தலைவர்கள் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏக்களை ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வளைத்துள்ளது.

 பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லோயிஸ் மராண்டி, குணால் சாரங்கி மற்றும் லக்ஷ்மண் துடு ஆகியோர் ஜேஎம்எம் கட்சிக்கு மாறியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க வர்,  லோயிஸ் மராண்டி. இவர் கடந்த தேர்தலில்,  தற்போதைய முதல்வர்  ஹேமந்த் சோரனை தோற்கடித்தவர் . ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் கட்சி மாறிய நிலையில், தற்போது 3 இணைந்துள்ளனர்.

 81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி  நடைபெற உள்ளது.நவம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. சுமார் 2.60 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளன  நேற்று முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணியும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணியும் தீவிரமாக செயலாற்றி வருகிறது.   தேர்தலில் போட்டியிடும்  கட்சிகள்  தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

இந்த தேர்தலில், பாஜக கட்சி ஏஜேஎஸ்யு, எல்ஜேபி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. அதன்படி,  பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது.  எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் எனவும் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் கட்டமாக  66 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.  இதில்,   சமீபத்தில் பாஜகவில் இணைந்த,  சிபு சோரன் மருமகள் சீதா சோரன், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  கடந்த 18-ந்தேதி  மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த கேதார் ஹஸ்ரா மற்றும் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி தலைவர் உமாகந்த் ரஜக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்த நிலையில்   தற்போது,  லோயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் டுடு ஆகியோரை  ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தூக்கி உள்ளனது. இவர்கள் நேற்று  முதல்வர் சோரன் முன்னிலையில்,  ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர்.தற்போது இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.

இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள இன்னும் மூன்றுவாரங்களே உள்ள நிலையில், முக்கிய தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு தாவியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.