வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 47 சட்டமன்ற தொகுதி மற்றும் 2 மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக சார்பில் கேரள மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு நகராட்சி கவுன்சிலராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட நவ்யா ஹரிதாஸ் 2021 சட்டமன்ற தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.