சண்டிகர்
நாளை அரியானா முதல்வராக நயாப் சிக் சைனி பதவியேற்க உள்ளார்.
மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டி பெற்றது. காங்கிரஸ் 37 தொகுதிகளை கைப்பற்றியதால் பா.ஜ.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-மந்திரி) நயாப் சிங் சைனி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் கட்சியின் மத்திய பார்வையாளர்கள் பங்கேற்றனர். அப்போது சட்டமன்ற கட்சி தலைவர் பதவிக்கு சைனியின் பெயரை எம்.எல்.ஏ.க்கள் கிரிஷன் குமார் பேடி, அனில் விஜ் ஆகியோர் முன்மொழிந்ததை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர்.
நாளை நடைபெறும் விழாவில் அரிய்யானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்ச்ர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்
Haryana, CM, Nayab Singh Saini, sworn in,Tomorrow,