சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Torrential rain causing flood.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும”

 தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.