சென்னை

பிரபல நடிகரும் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனுமான சூர்யா மற்றும் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன

முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சூர்யா தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கங்குவா’ திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது.  முதல் படத்திலேயே சூர்யா விஜய்சேதுபதி ஒர் நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகி மோத உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.