பெங்களூரு:  மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் எம்எல்சி ரமேஷ் கவுடா ஆகியோர் மீது பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறித்ததாக  புகாரின் பேரில் பெங்களூரு காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

50 கோடி ரூபாய் கேட்டு தனக்கு உயிருக்கு மிரட்டல் விடுத்ததாக விஜய் டாடா என்ற தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான விஜய் டாடா பெங்களுரு போலீசாரிடம் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது புகார் ஒன்றை அளித்தார்.

கர்நாடக மாநிலம் தாசரஹள்ளியில் வசிக்கும் புகார்தாரர் விஜய் டாடா ரியல் எஸ்டேட் தொழிலதிபர். அவர் 2018 ஆம் ஆண்டு முதல் ஜேடிஎஸ் கட்சியில் அடையாளம் காணப்பட்டு தற்போது கட்சியின் சமூக ஊடகத் துறையின் துணைத் தலைவராக உள்ளார்.  விஜய் டாடா புகாரின்படி, “2019 மாண்டியா மக்களவைத் தேர்தலின் போது, ​​ஜேடிஎஸ் வேட்பாளர் நிகில் குமாரசாமி சார்பில் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து பல கோடி ரூபாய் செலவழித்ததாகவும்,   முன்னாள் எம்எல்சி ரமேஷ் கவுடா கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வீட்டுக்கு வந்து குமாரசாமிக்கு போன் செய்தார். சன்னப்பட்டணா இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமிக்கு சீட்டு இறுதியானது. அப்போது அவர், ‘இந்த முறை சன்னப்பட்டணா இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது தவிர்க்க முடியாதது, தேர்தல் செலவுக்கு 50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்றார்.

நான் உடனே ‘சார் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனது ரியல் எஸ்டேட் திட்டங்களை முடிக்க வேண்டும் எனவே கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பேன். எனது வார்த்தைகளால் ஆத்திரமடைந்த குமாரசாமி, 50 கோடியை தயார் செய்யவில்லை என்றால், நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை, பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவது மட்டுமின்றி, இங்கு வாழ்வதும் கடினம் என மிரட்டினார்.

“எனக்கு எதிரே அமர்ந்திருந்த ரமேஷ் கவுடா, “குமரண்ணா சொன்னபடி 50 கோடி தயார் செய்து, கோவில், பள்ளிக்கூடம் கட்டுகிறேன், அதற்கு 5 கோடி தருகிறேன் என்று மிரட்டினார். இந்தப் பணத்தைத் தராவிட்டால், சிக்கலைச் சந்திக்க நேரிடும்,” என, புகாரில் விஜய் டாடா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் , மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது மிரட்டி பணம் பறித்தல், உயிருக்கு அச்சுறுத்தல் என 2 பிரிவுகளின் கீழ் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். . எஃப்ஐஆரில் ரமேஷ் முதல் குற்றவாளியாகவும், எச்டி குமாரசாமி 2-வது குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் எம்எல்சி ரமேஷ் கவுடா மீது விஜய் டாடா கூறிய குற்றச்சாட்டுகளை “தவறான குற்றச்சாட்டுகள்” என்று ஜேடி(எஸ்) சோஷியல் மீடியா செல் தலைவர் சாந்தன் எச்.எஸ்   நிராகரித்தார்.

ஜேடிஎஸ் சமூக ஊடகப் பிரிவுக்குள் விஜய் டாடா எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்றும், விளம்பரத்திற்காக இதைச் செய்கிறார் என்றும் சாந்தன் எச்எஸ் கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். டாடா மீது கட்சி புகார் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.