மேஷம்
வெளிநாட்டு வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தீங்களா? நிச்சயமா அது கைகூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒன் பை ஒன்.. வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளால் பொருள் சேர்க்கை உண்டாகவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வாங்க. வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். வார மத்தியில் கவனம் தேவை
சந்திராஷ்டமம் : அக்டோபர் 6 முதல் அக்டோபர் 8 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
ரிஷபம்
உத்தியோகத்தில் இருக்கறவங்க கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும்.. அவருடன் இருந்த சண்டை மகிழ்ச்சிகரமாக முடிவுக்கு வரும். பெண்களுக்கு கடின முயற்சி செய்தால்தான் காரியங்கள் பெற்றி பெறும். அரசியல்வாதிகள் மிகப் பெரிய சேவைகளைச் செய்து பொது மக்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சிலர் காவல்துறை உதவியைச் சந்திக்க நேரலாம். செய்யும் தொழிலில் இலாபம் குறைந்து, தடைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகள் தொல்லை ஏற்படலாம். சிலருக்குக் குழந்தைகள் மூலம் சந்தோஷம் ஏற்படும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 8 முதல் அக்டோபர் 11 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
மிதுனம்
ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானங்களோ அல்லது லாபங்களோ வரும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அதன் பலன்களும் சூப்பரா இருக்குமுங்க. தந்தைக்கும் தந்தைக்கு நிகரானவங்களும் வரும் பிரச்சினையைப் பொருட்படுத்தவே வேண்டாம். எல்லாம் தற்காலிகம்தான். அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் கேர்ஃபுல்லாப் போங்க. வாரம் ஃபுல்லா மனசுல உற்சாகம் இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. பண விஷயமான சிந்தனைகள் எழும். மனதுக்குப் பிரியமான நபருடன் ஏற்படும் இனிய பயணங்களால் ஹாப்பி ஆவீங்க. – இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.
கடகம்
வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அலுவலகத்திலும் , வீட்டிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அழகாகக் கையாளும் திறமை உங்களிடம் இயல்பா இருப்பதால் குழப்பங்கள் நீங்கி மனசுல தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அருமையாய் நலம் பெறும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வருமானம் அதிகம் வந்தாலும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. தொழிலில் கூட்டாளியின் புதிய ஆலோசனைகள் வரவேற்கத்தக்கதாக இருக்கும். அவரது கடமை உணர்வும், திறமையும் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தாலும், அவரை முழுமையாக நம்பி விடாதீங்க. சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய முதலீடுகளை செய்ய முற்படுவாங்க. சிலருக்குப் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அந்த நபர் சமூகத்தில் மிகப் பெரிய உயரத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
திட்டமிட்ட பயணங்கள் திட்டமிட்டபடியே நடந்து முடியும். மேலும் அவை திட்டமிட்ட வெற்றிகளையும் அளிக்கும். நல்ல சிந்தனைகளும் நல்ல யுக்திகளும் மனசில் உருவாகும் அதனால எல்லாரும் பாராட்டுவாங்க. பழைய சிநேகிகிளை/ சிநேகிதர்களைச் சந்திப்பீங்க. கவர்ச்சி அம்சம் அதிகமாகும். பாராட்டும் கைதட்டல்களும் கிடைக்கும். மேடையில் பேசுவீங்க. கலைத்துறையில் ஈடுபாடு வரும். பாவ எண்ணங்கள் மனசில் தோன்றாமல் பார்த்துக்குங்க. இந்த வாரம் விருந்தினர் வருகை வீட்டில் கொண்டாட்டத்தையும், கும்மாளத்தையும் ஏற்படுத்தி மனதை குஷியாக வைக்கும். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும். புதிய சொத்துக்கள் சேரும். சுக சௌகரியங்கள் மேம்படும். சுப வார்த்தைகளைக் கேட்டு நல்ல குணங்களுக்கு மாற முயல்வீங்க. குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும்.
கன்னி
நல்லதே நடக்கும். கட்டாயம் நடக்கும். நடந்தே தீரும். எவ்வளவு சோர்வான நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்நிலையிலிருந்து வெளியே வரும் மனவலிமைக் கிடைக்கும். பணவரவு அதிகமாகும். எனவே பொருளாதாரம் ஓங்கும். திடீர் அதிருஷ்டத்தையெல்லாம் எதிர்பார்க்கவே வேணங்க. உழைப்பாலும் முயற்சியாலும்தான் கட்டாயமா உக் இலக்கை அடைய முடியும். நிறைய வகைகளில் வரும்படியும் லாபங்களும் வரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. நன்மைகள் நிதானமாய்த்தான் நிகழும். அரசு அதிகாரிகள் உதவ முன்வருவாங்க. செய்யும் தொழிலில் இலாபம் அதிகரிக்க பொருளாதாரம் சீராகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வாங்க.
துலாம்
நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீங்க. பிள்ளைகள் பிடிவாதமாக இருந்தாலும் கூடுமானவரை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகளும் ஏற்படக்கூடும். சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சனைகள் வரும். ஆனால் ஓடிடும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர மனப்பான்மை உண்டாகும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட அருமையான மனநிறைவு ஏற்படுமுங்க. வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீங்க. தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் நன்மை ஏற்பட்டு, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். குடும்பத்தில் கலகலவென்ற சூழல் நிலவும். இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும்..
விருச்சிகம்
வேண்டி வரும். கலைத்துறையில் உள்ளவங்களுக்குத் தடை தாமதங்கள் வரும். வெற்றி சற்றே எட்டிப்போகும். கடைசியில் கைக்கு வரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்பிருந்ததைவிடவும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பல நாள் திட்டமிட்டுப் பல காலம் தட்டிப் போய்க்கொண்டிருந்ததுதானே? ஆனா அந்த விஷயங்கள் எல்லாம் தன்னிச்சையாய் மடமடன்னு முடியுங்க. குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றங்கள் இருக்கும். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் மகன் அல்லது மகள் பெரிய அளவில் நன்மைகளை அடைவாங்க. குடும்பத்தோடு கோவில், குளம் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் எனச் சென்று மகிழ்வீங்க. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீங்க. மனதுக்குப் பிரியமான நபருடன் நட்பு ஏற்படும். வாழ்க்கையில் மனமகிழ்ச்சியையும், சுகானுபவங்கள், அடைவீங்க.
தனுசு
பெண்களுக்கு இவ்ளோ நாளா இருந்த வந்த பிரச்சனைகள் போயேபோச். கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீங்க. அரசியல் துறையில் உள்ளவங் களுக்கு சக நண்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இட்ஸ் ஓகே. இருவரில் ஒருவர் மன்னிப்புக் கேட்பதால் சுலபமாக முடியும். அது நீங்களா இருந்தாலும் பரவாயில்லை. உங்க மன நிம்மதிக்கு நீங்கதான் ஸ்டெப் எடுக்கணும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளும் நேரம் இருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பணவரவுகள், பணவுதவி கள் வந்து சேரும். இந்த வாரம் மனைவி அல்லது கணவர் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீங்க.
மகரம்
மகன் அல்லது மகளின் திருமண முயற்சி களில் ஈடுபட சாதகமான வாரம். வாயில் நல்ல வார்த்தைகள்தான் வர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்க. முக்கியமாய் சோப வார்த்தைகளோ எதிர்மறைச் சொல்கறோ வராமல் பார்த்துக்குங்க. ஆரோக்யத்தைக் கண் மாதிரியும் பார்த்துக்கணும். கண்ணின் ஆரோக்யத்தையும் பார்த்துக்கணும். கொடுத்த வேலையை உரிய நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். மிகமிக முக்கியமான பெரியவர்கள் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். கையில் எடுக்கும் காரியங்களில் எல்லாம் தடை, தாமதங்கள் ஏற்படும், வேலைகளை முடிக்க தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும்.
கும்பம்
எந்த விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்குமுங்க. அலுவலக விஷயமாய்ப் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படக்கூடும். கோயில் விசிட்கள் நிறையச் செய்வீங்க. ஆரம்பிச்ச காரியங்களை முழுமையா முடிக்கணும்னு தீவிரமா இருங்க. உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் செய்யும் செயல்கள் உங்க கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். கட்டுப்படுத்திக்குங்க. இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள், ஆடை அணி மணிகள் லாபம், சந்தோஷ விருந்து ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலம் எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்தும் விரைவில் கிடைக்கும் கோபத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். பொறுமையைக் கடைப் பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும்
மீனம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலிடம் உங்களிடம் பாராட்டுத் தெரிவிப்பாங்க. குடும்பத்துல ஹாப்பியான சூழ்நிலை காணப்படும். ஒரு விஷயம் நல்லா நினைவில் வெச்சுக்குங்க. வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாலினத்தினரிடம் மிகவும் கவனமாய் இருங்க. நேர்மையான சிந்தனைகள் வருமாறு பார்த்துக்கொண்டால் சூப்பர் வாரம் இது. இந்த வாரம் உங்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு. உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் உங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவீங்க. வார ஆரம்பத்தில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்