சென்னை

ஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் பட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ‘மனசிலாயோ’ மற்றும் ‘ஹண்டர் வண்டார்’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

‘வேட்டையன்’ படத்திற்கு தணிக்கைக் குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.