சென்னை :  நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது, அவர் விரைவில் விடு திரும்புவார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார்.

73 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த், கூலி படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது  உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து  நேற்று (செப்டம்பர் 30) இரவு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரஜினிகாந்த்துக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் கொண்டு வருகின்றனர். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ரஜினி  தரப்பிலோ… மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலோ இதுவரையிலும் எந்த தகவலும் வெளியாகவில்லை இன்னும் சில மணி நேரத்தில் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அமைச்சர்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம்.. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று  கூறியதுடன், அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. , “பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்.  வழக்கமான பரிசோதனகளுக்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரித்தார்.