மலையாள நடிகர் சித்திக் இளம் நடிகையை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள மற்றும் இந்திய பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கை வெளியான பின் நடிகர் சித்திக் தன்னை 2016ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி மேலும் பரபரப்பை கிளப்பினார்.

இதையடுத்து நடிகர் சித்திக் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தை நடிகர் சித்திக் நாடினார்.

அவருக்கு ஜாமீன் வழங்க கேரள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர் தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் சித்திக் மீது கேரள காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது