சென்னை
தமிழக துணை முதல்வர் என்பது பதவி இல்லை, பொறுப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை துணை முதல்வராராக பதவியேற்க உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளதால், இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்களும் அவருடன் இன்று பதவியேற்க உள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்.
”நம் பெருமைமிகு தமிழகத்தின் துணை முதல்வராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதல்வர்ர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், முதல்வர் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!”
என்று பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]