ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்து கோப்பையை வென்றது.

சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்திய அணி இதுவரை 5 முறை ஆசிய சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற வரலாறு படைத்துள்ளது.

இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் கடைசி 15 நிமிட ஆட்ட நேரத்தின் 6வது நிமிடத்தில் இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் அடித்த அற்புதமான கோலை அடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது.

ACT ஹாக்கி போட்டி : ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி