ஜுலானா

ரியானா மாநிலம் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டி இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சமிபத்தில் வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ள நிலையில் அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுகிறார்..

இன்று ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது வினேஷ் போகத்,

“நான் அரசியலுக்கு வருவது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்”

என்று கூறியுள்ளார்.