டெல்லி: 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாகவும்,  மாவட்டநீதிமன்றங்களில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதிகள் மூன்று பேரை சென்னை  உயர்நீதி மன்ற  நீதிபதிகளாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற  கொலிஜியம்  பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன்,  சென்னை உயர் நீதிமன்றத்தின்  கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும்  நீதிபதி லக்ஷ்மண சந்திர விக்டோரியா கவுரி உள்பட 5 நீதிபதிகளை  நிரந்தர நீதிபதியாக  நியமிக்கவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.யால் முன்மொழியப்பட்ட கூடுதல் நீதிபதிகள்.

(i) நீதிபதி எல் விக்டோரியா கௌரி,
(ii) நீதிபதி பிபி பாலாஜி,
(iii) நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன்,
(iv) நீதிபதி ஆர். கலைமதி, மற்றும்

(v) நீதிபதி கே கோவிந்தராஜன் திலகவதி

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நீதிபதிகளை நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம் ஒருமனதாக தீர்மானித்தது. இந்த பரிந்துரையை முதலமைச்சர் மற்றும் ஆளுநரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூவரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சக நீதிபதிகளான ஜெ. சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி வரும் எம்.ஜோதிராமன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் ஆர். பூர்ணிமா மற்றும் சென்னை தொழிலக தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.டி.மரியா கிளேட் ஆகிய மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்,சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.