சென்னை: கோவை வேளாண் பல்கலைக்கழக 9,526 மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கி கரவுவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு வேளாண் அமைச்சர் புறக்கணித்தார்.
பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரே இருக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் காரணமாக தமிழ்நாடு அரசுக்கும், மாநில திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கோவையில் உள்ள பிரபலன தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வரவேற்றார். விழாவில் மத்திய பயிர் ரகங்கள், உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திலோச்சன் மொஹபத்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் இளம் அறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மொத்தம் 9,526 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றனர்.
விழாவில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் துணை வேந்தரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.