சென்னை: ராமேஷ்வரம் பகுதியில் உள்ள சுற்றுலா தலமான பாம்பன் பாலத்தையும், தனுஷ்கோடியையும் சுற்றுலா பயணிகள் கப்பலில் சென்று சுற்றிப் பார்க்கும் வகையில் சிறிய ரக  பயணிகள் சுற்றுலா கப்பல் சேவையை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சுற்றுல் பயணிகள் பெரிதும் விரும்பும் ராமேஸ்வரம் பாலம் மற்றும் தனுஷ்கோடி உள்பட  அதன் சுற்றுப்புறங்களில் புதிய சுற்றுலா பகுதிகளை கண்டுகளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடல் வாரியம் முடிவு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அளப்பரிய  அனுபவத்தை அளிக்க கப்பல் சேவை தொடங்க தமிழ்நாடு  திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பாம்பன் பாலம், தனித்தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற இடங்களை சுற்றுலா பயணிகள் விரைவில்  கண்டு மகிழலாம்.

ராமேஸ்வரம் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது முதலில் ராமநாத சுவாமி, அடுத்து தூக்குபாலம் அத்துடன் மறைந்த குடியரசு தலைவரான அப்துல் கலம். அதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள தனுஷ்கோடி உள்பட பல சுற்றுலா பகுதிகள் உள்ளன.

ராமேஷ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலமாகும். தனித்தீவாக உள்ள ராமேஸ்வரம் ஆன்மிக தளமாக விளங்குகிறது. இது கண்கவர் இயற்கை அழகைக் கொண்ட ஒரு அமைதியான நிலப்பரப்பு ஆகும். புனித யாத்திரை ஸ்தலமாக புகழ்பெற்ற ராமேஸ்வரம் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலின் தாயகமாகும இங்கு தினசரி பல ஆயிரம் பக்தர்கள்  வந்து சுவாமி தரிசனம் செய்வதுடன், பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்து, அங்குள்ள அக்னி தீர்த்தம் மற்றும் 22 புனித தீர்த்தங்களில் நீராடி வருகின்றனர். மிகவும் தெய்வீகமான பகுதியான ராமேஷ்வரம் மற்றும் மிகவும் கவித்துவமானது.

இங்கு ராமநாதசுவாமி கோயில், கோதண்ட ராமர் கோயில், ராமர் பாதம், நம்பு கோயில் போன்ற பல கோயில்களை சுற்றியுள்ள நகரமாகும். காசிக்கு சென்றவர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்து தங்களது பாவங்களை விட்டு செல்வார்கள். அப்படி பெயர் பெற்ற பூமி தான் ராமேஸ்வரம், அங்குள்ள அக்னீதீர்த்த கடற்கரை மட்டுமில்லை ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீர்த்தங்களுக்காகவும் வட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்திய தீபகற்பத்தின் மிக நுனியில் ராமஸ்வரம் உள்ளது,  ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இயற்கை அழகு கொண்ட பகுதியாகும்.  இது மட்டுமில்லாமல் ராமேஸ்வரத்தில் இருந்து 25கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் சிக்கி அந்த ஊரே இல்லாமல் சென்று விட்டது. அங்கிருந்த துறைமுகம், ரயில் நிலையம், தேவாலயம் போன்றவை தற்போது எழும்புக்கூடாகவே காட்சியளிக்கிறது. தனுஷ்கோடியில் இருந்து 30 கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் உள்ளது இலங்கை. இதன் காரணமாக இந்திய கடற்படை அந்த பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலும், மறைந்த குடியரசு தலைவரான ஏபிஜே அப்துல்கலாம் நினைவிடம் பிறந்த ஊராகம். அவரது நினைவிடமும் அங்கே அமையப்பெற்றுள்ளது முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அவர் வாழ்ந்த வீடாகும். இந்த இடத்தை பார்ப்பதற்காகவே பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி அனைவரும் எதிர்பார்ப்பது, அங்குள்ள  பாம்பல் பாலம், ராமேஸ்வரம் பகுதியையும்- மண்டபத்தையும் இணைப்பது இந்த பாம்பன் பாலம் தான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ரயில் பாலம் இல்லாத காலத்தில் படகு மூலமாகவே மண்டபம் பகுதிக்கு செல்லும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான் 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் சேவை புரிந்து வருகிறது. 1990ஆம் ஆண்டில் தான் பேருந்து போக்குவரத்திற்காக பஸ் பாலமும் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் இருந்து கடலில் மீனவர்கள் மீன்பிடிப்பதையும், ரயில் பாலத்தில் ரயில் செல்வதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் கூட்டம் பாம்பன் பேருந்து பாலத்தில் குவிவார்கள்.

இயற்கை அழகை தன்னத்தே கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பாக சிறிய, சிறிய படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து குருசடை தீவிற்கு படகு இயக்கப்படுகிறது. இந்த படகில் பயணம் செய்ய ஒருவருக்கு 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதே போல மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சிறிய படகு சேவை இயக்கப்படுகிறது. இந்தநிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கி சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அ தன் படி இனி வரும் காலங்களில் பாம்பன் பாலத்தை கப்பலின் மூலம் அருகில் சென்று பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ராமேஸ்வரத்தை சுற்றி பல இடங்களில் தனித்தீவுகள் உள்ளது இந்த பகுதியையும் பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடல் அலைகளை தடுக்கும் பவளப்பாறைகளும் அதிகளவு காணப்படுகிறது அந்த இடத்தையும் விரைவில் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அசின் கடல் சார் வாரியம் கப்பல் சேவை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சம் 50 பேர் பயணம் செய்யும் வகையில் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் இந்த சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்குவதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடு பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த திட்டத்தில் படகு சேவையை இயக்குபவர்கள் முன்வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை  உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கும் இந்த திட்டம் வாய்ப்பாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சிறிய ரக சுற்றுலா கப்பல் சேவை நடத்த விருப்ப முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், பயணிகள்  கப்பலின் நீளம் 60 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், அகலம் 18 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் கப்பல்  இருக்க வேண்டும் என்றும்,  இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்துள்ளது.

 பயணிகள் கப்பலை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.