டெல்லி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் பயணம் செய்தது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் உரையாடியது வைரலாகி உள்ளது.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில், ஒரு மாலைநேரப் பொழுதில், முதல்வர் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த விடியோவைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்று கேட்டுள்ள்ளர்.

இதற்கு பதிலாக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஒன்றாக சைக்கிளில் பயணித்து சென்னையை ஆராய்வோம் எனவும் என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை அனுபவிப்போம் எனவும் தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே நடைபெற்ற உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.