புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம்

திருவிழா

பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்’ நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

தல சிறப்பு

கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தி யாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.

பிரார்த்தனை

மூலவராக வணங்கும் சுவரின் மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்கள் இதனை சிறிதளவு நீரில் கரைத்துச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்புகிறார்கள்.

நேர்த்திக்கடன்

யோகீஸ் வரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறை வேறியவர்கள், காவடி எடுத்து காவி வஸ்திரம் அணிவித்து வழி படுகின்றனர்.

தலபெருமை

தினசரி பூஜையின் போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப் படுகிறது.

மாம்பால் நைவேத்யம்

வைகாசி விசாகத் தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ் வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகிய வற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப் படும். “மாம்பால்’ எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபடு கிறார்கள்.

தல வரலாறு

முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளி யிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு “பூலா உடைய கண்டன் சாஸ்தா’ என்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவ சமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறை வனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், “யோகீஸ்வரர்’ என்றும் பெயர் சூட்டினர்.

சிறப்பம்சம்

கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தி யாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.

பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடா கிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், “புற்றேரி’ எனப்பட்ட இவ்வூர் “புத்தேரி’ என மருவியது.

அமைவிடம்

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் ஸ் டாண்டில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் புத்தேரி உள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் கோயில் அமைந் துள்ளது.