டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு   தொடர்பாக  உச்சநீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொடூர பாலியல் கொலையை ஓரு கும்பலே செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், மம்தா அரசு ஒரே சஞ்சய் ராய்  என்ற  ஒருவரை மட்டுமே கைது செய்துவிட்டு, முக்கிய தடயங்களை அழத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படுகொலை சம்பவத்தை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இதுதொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம் சிபிஐ இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ தாக்கல் செய்தது.

பெண் மருத்துவர் பாலியல் கொலை: தான் முதல்வராக உள்ள மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் மம்தா…