சென்னை

சை நிகழ்ச்சிகள் நடத்த அமெரிக்கா சென்றுள்ள அனிருத்துக்கு கோலாகல வரவேர்ப் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அனிருத் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்

இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த வொய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றார்.மேலும்  இவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தற்போது அமெரிக்காவில் அனிருத் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.  அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.. இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வந்த அனிருத்திற்கு இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.