சென்னை: மறைந்த முன்னாள் பரிதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரத நினைவிடத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் அங்காகே அவரது உருவ படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் அதிகாலை முதலே நல்ல மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு நடந்து சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் சென்று, மரியாதை செய்தனர்.
மகாராஷ்டிர தலைநகா் மும்பையிலும் இன்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவைத் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ்) தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். அப்போது மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்தும் தலைவா்கள் விவாதிப்பாா்கள் என்று தெரிகிறது. இதன் காரணமாக ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா மகாராஷ்டிரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை(ஆக. 20) அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினரும் ராஜீவ் காந்தியின் உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் சென்று, அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ள்ளார்.