திருவனந்தபுரம்

பிரபல திரைப்பட கலை இயக்குநர் ஹரி வர்கலா மரணம் அடைந்துள்ளார்.

ஹரி வர்கலா மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களை உருவாக்க கலை இயக்குனராக முக்கிய பங்காற்றியவர் ஆவார். கடந்த 1984-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் வெளியான ‘சந்தர்பம்’ திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகம் ஆனார்.

இயக்குநர் ஜோஷியுடன் இவரது ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் கூட்டணியில் பல வெற்றிப்படங்கள் உருவாகின. அவற்றில், ‘நாயர் சாப்’, ‘பத்ரம்’, ‘லேலம்’, ‘எண்.20 மெட்ராஸ் மெயில்’ மற்றும் பல அடங்கும்.

கடந்த 90 களை மலையாள திரையுலகின் பொற்காலம் என்பதற்கு அப்போதய பல வெற்றிப்படங்களுக்கு பின்னால் ஒரு முக்கிய நபராக இருந்தர் ஹரி வர்கலா ஒரு காரணம் ஆவார்.  இவர் 40க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லைலா ஓ லைலா’ திரைப்படத்தில் ஹரி வர்கலா இறுதியாக பணியாற்றி உள்ளார் பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஹரி வர்கலா நேற்று காலமானார்.

சுமார் 72 வயதான இவர் தனது இல்லத்தில் நேற்று காலமானார். ஹரி வர்கலாவின் மறைவுக்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.