சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் இணைச் செயலாளராக லட்சுமிபதி ஐ ஏ எஸ் நியமிக்கபட்டுள்ளார்.

நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழக ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.
சிவதாஸ் மீனாவின் இடத்தில் அதாவது தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தமிழக முதல்வரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லெட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel