சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்தப் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் உலகெங்கும் வெளியாகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் உடன் வேட்டையன் படத்தில் கைகோர்த்து இருக்கிறார்.

பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் தீபாவளியை ஒட்டி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் மற்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது ரஜினி பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.