சென்னை: போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவல்துறையாகவே செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, போதை பொருள் நடமாட்டமும், கொலை, கொள்ளை சம்பவங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அதுபோல அரசு மற்றும் கோவில் நிலங்களும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் துணையுடன் அபகரித்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும், தமிழ்நாடு அரசும், அரசையும், காவல்துறையின் நடவடிக்கைளை விமர்சித்தால், அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து மிரட்டி வருகிறது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளை கடுமையாக சாடியதுடன், போலீசார் எப்படி ஒவ்வொரு வழக்களளையும் விசாரிக்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்து உள்ளது.
கார்த்தி என்பவர் தொடர்ந்த நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்., இந்த வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்காத நிலையில், காவல்துறையினரை கடுமையாக சாடியதுடன், நில அபகரிப்பு வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது வேதனை தருகிறது , இதனால்,, ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்போடு தொடர்புடைய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்? என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், சிபிஐ சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.