70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது இதில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகையாக நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கும், கட்ச் எக்ஸ்பிரஸ் என்ற குஜராத்தி மொழி திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் ஆகிய இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படமாக மலையாள திரைப்படம் ஆட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் நடித்த உஞ்சாய் படத்தை இயக்கிய சூரஜ் ஆர் பார்ஜதியா சிறந்த இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகையாக நீனா குப்தா, சிறந்த பின்னணி பாடகராக அர்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

https://x.com/PIB_India/status/1824371982164692998

சிறந்த பின்னணி பாடகியாக பாம்பே ஜெயஸ்ரீ தேர்வு.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஏ. ஆர். ரஹ்மான் பெற்றிருக்கிறார்.

சிறந்த இசையமைப்பாளராக ப்ரம்மாஸ்திரா படத்திற்கு இசையமைத்த ப்ரீத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இந்தி திரைப்படமாக ஷர்மிளா தாகூரின் ‘குல்மொஹர்’ தேர்வு.

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் 2 பெற்றிருக்கிறது.

சிறந்த நடன இயக்குனருக்கான விருதை மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுள்ளனர்.