சென்னை

டிகர் விஜய் யின் கட்சியான தமிழக வெற்றி கழகத்துகு 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளா

கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் கொடி, சின்னம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது அரசியல் கட்சி அறிவிப்பின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் வழங்கியது போன்று, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளில் சட்டசபை தொகுதி வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவற்றில் எந்த கொடியை பயன்படுத்துவது என்பது குறித்து விஜய் முடிவெடுப்பார் என தமிழக வெற்றிக் கழக தலைமை தெரிவித்துள்ளது. மேலும் விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் வரை, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது எனவும், செப்டம்பர் 5-ல் படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.