சென்னை: சென்னையில்  நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் , ஆங்காங்கே மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை அகற்றும்  பணியை  அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.  மழை மேலும் 3மணி நேரம் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்று” எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மழை தொடர வாய்ப்பு – வானிலை அறிக்கை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், தாம்பரம், திருத்தணி, உத்திரமேரூர், வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அமைந்தக்கரை,அயனாவரம்,கலவை,பெரம்பூர்,புரசைவாக்கம்,மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.நேற்று மாலை முதல் இன்று காலை வரை  பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், மாநகர் முழுவதும் வெள்ளக்காடாது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடியாததால், தண்ணீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்தியது.

எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், கிண்டி, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. மேலும் கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு மற்றும் சூளைமேடு ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பரவலாக கொட்டி வருகிறது. நந்தனம், கேகே நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையார் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.  அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு பகுதியிலும் நள்ளிரவும் முதல் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளித்தது.

சென்னை நகரின் தாழ்வான பகுதிகளை கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ளனர். இதைத் தொடர்ந்த சில பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்று” எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அடுத்த 3மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், தாம்பரம், திருத்தணி, உத்திரமேரூர், வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அமைந்தக்கரை, அயனாவரம், கலவை, பெரம்பூர், புரசைவாக்கம், மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அரியலூர் – 5.5 செ.மீ., மீனம்பாக்கம்- 4 செ.மீ., பெரம்பலூர்- 4.7 செ.மீ., குன்றத்தூர் -8 செ.மீ., கடலூர் -7.8 செ.மீ., காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலா-7 செ.மீ., கேளம்பாக்கம்- 10 செ.மீ., சோழிங்கநல்லூரில்-11.5 செ.மீ எண்ணூர்- 8.6 செ.மீ., செம்பரம்பாக்கம்- 8 செ.மீ., மழை பதிவு.