சென்னை: லஞ்சம் – அராஜகம் போன்ற காரணங்களுக்காக 4 திமுக கவுன்சிலர்கள் 1 அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேருக்கு சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர்  நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை பதவி நீக்கம்  செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி, மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களிடையே கவுன்சிலர்கள் மீதான நம்பிக்கை பொய்த்து போயுள்ளது. இது வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், உள்ளாட்சி பிரதிநிதிகளக உள்ள  முறைகேடுகளில் ஈடுபடும் கவுசிலர்களை களையெடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களிடம் லஞ்சம் மற்றும் மிரட்டல் நடவடிக்கைளில் ஈடுபட்டு பல்வேறு புகார்களுக்கு உள்ளான கவுன்சிலர்களை நீக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெட்ரோ குடிநீர் பணிகளை தடுத்து நிறுத்தியது, கட்டுமான பணிகளின் போது லஞ்சம் பெறுவது, தேவையில்லாத பணிகளை மேற்கொள்ள எஸ்டிமேட் போட சொல்லி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது, சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தாரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது என பல்வேறு புகார்களில் சிக்கிய திமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் ஒருவருக்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அதன்படி,  சோழிங்கநல்லூரை சேர்ந்த இரு கவுன்சிலர்கள், பெருங்குடி, மாதவரத்தை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர் என 4 பேரிடமும் மேற்கண்ட புகார்களின் பேரில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இது போன்று பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படும் புகார்கள் வந்த நிலையில் உங்கள் 4 பேரையும் ஏன் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நோட்டீசுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கம் இவ்வாறு அவர்கள் அனுப்பும் விளக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவர் என தெரிகிறது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா,  வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு மெட்ரோ குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் பணிகள், சாலை பணிகள் என அனைத்தையும் கவுன்சிலர்களும் எம்எல்ஏக்களும் முடித்திருக்க வேண்டும். இதில் ஏதாவது நிறுத்தப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது 4 திமுக கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.   மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ். சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாரியாக கவுன்சிலர்கள் குறித்து விசாரணை. மேலும் படிக்க அதிக கமிஷன் கேட்டு பணிகள் நிறுத்தம், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் என கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாரியாக கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சில கவுன்சிலர்களுக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுத்தாகவும், இதில், 4 திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.