ட்டி

நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் இங்கும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக உதகை, கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆகாச பாலம் என்ற இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கூடலூர் வரும் கனரக சரக்கு வாகனங்கள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் மிகக் கனமழையும், திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஆக. 2) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.