சென்னை

ன்று முதல் .12 ஆம் வகூ அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் எழுதி இருந்தனர். கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் வெற்றி பெற்றனர்.

இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும், மதிப்பெண் பட்டியலையும்  பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.