கொழும்பு

லங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டி இடுவதற்காக பதவி விலகி உள்ளார்.

தற்போதைய் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்குகிறது/.

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் ஜே.வி.பி தலைவர் அனுரா குமார திசநாயக்க ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் இலங்கையின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சவும்  இணைந்துள்ளார். இதயொட்டி அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து சுதந்திர கட்சியின் தலைவரான விஜயதாச ராஜபக்ச,

”இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விரைவில் அறிவிக்கப்படும் புதிய கூட்டணியின் கீழ் அதிபர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வேன்.  நானும் தற்போதைய அதிபரும் தேர்தலில் போட்டியிட  விருப்பம் தெரிவித்ததை அடுத்து பிரச்சினைகள் எழுந்தன.

நாங்கள் இரு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே அமைச்சரவையில் இருந்து இரண்டு பேரும் போட்டியிடுவது முக்கிய பிரச்சினையாக இருந்தது. எனவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எனது அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன்.”

என்று கூறியுள்ளார்.