சென்னை
மத்திய பட்ஜெட்டை எதிர்த்து நிதி ஆயோக் கூட்ட்த்தை புறக்கணிக்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ள்ர்.
நேற்று மக்களவையில் இன்று மத்திய அமாஇச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், தமிழ் வார்த்தையும் தமிழ்நாடு என்பதும் இடம்பெறாமலேயே ஒட்டுமொத்த உரையும் வாசித்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்ற நிலையில் தமிழகத்திற்கு என எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மத்திய பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம்.
”தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை நிதிநிலை அறிக்கை தந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. தமிழக அரசு பரிந்துரைத்த எந்த திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் குறித்து எந்த சிந்தனையும் பா.ஜனதா அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. 2 மிகப்பெரிய பேரிடரை சந்தித்த தமிழகத்திற்கு இதுவரை போதிய வெள்ள நிவாரணம் தரப்படவில்லை. தமிழகத்திற்கு திட்டத்தை அறிவிக்காததால் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை தி.மு.க. எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த உள்ளார்கள்.”
என்று கூறினார்.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தராராஜன்,
”நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார்.
மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழக நலனும்,தமிழக மக்களின் நலனும் இருக்கிறது
மேலும் தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும்.
இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழக நலனை முதல்வர் புறக்கணிக்கிறார். இவர்களின் அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்”
எனத் தெரிவித்துள்ளார்.