“கடவுள் மட்டுமே என்னைக் காப்பாற்றினார்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அவரது வலது காதின் மீது உரசி சென்ற தோட்டாவால் ஏற்பட்ட சிறுகாயத்துடன் உயிர் தப்பினார்.
1981ம் ஆண்டு அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் மீதான கொலை முயற்சிக்குப் பின் 43 ஆண்டுகள் கழித்து நடந்துள்ள இந்த கொலை முயற்சி அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் மீதான இந்த கொலை முயற்சியைக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடம்கொடுக்க முடியாது என்று கூறினார்.
டிரம்பை கொல்ல முயன்ற நபர் பாதுகாப்பு படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தான் உயிருடன் நலமுடன் இருப்பதாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மருத்துவ முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய டிரம்ப் “கடவுள் மட்டுமே என்னைக் காப்பாற்றினார்” என்று மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததற்காகவும் இருவர் காயமடைந்ததற்காகவும் வருத்தம் தெரிவித்துள்ள டிரம்ப் தனது பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கொலை முயற்சி… துப்பாக்கியால் சுட்ட நபரின் அடையாளம் தெரிந்தது…