பென்சில்வேனியா
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்ததால் அமரிக்க மக்கல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இதனால்அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன., பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் பைடனின் அனைத்து பிரசாரக் கூட்டங்களும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.