சென்னையில் நாளை நடைபெற உள்ள இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்பில் பே-டிஎம் இன்சைடர் வழியாக இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் இந்த சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்காக சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வரும் ரசிகர்கள் வந்து செல்ல இருவழி பயணத்திற்கும் கட்டணமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக க்யூஆர் கோடை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இசைஞானியின் இசைமழையில் நினையாக்காத்திருக்கும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயிலின் இந்த அறிவிப்பு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.