தெஹ்ரான்

துருக்கி விமான நிறுவன பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அரசு விமான நிறுவன அலுவலத்தை மூடியுள்ளது.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றி வருவதால் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப்அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

சென்ற ஆண்டு தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி  காவ்லதுறை நடத்திய தாக்குதலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

இதனா அங்கு போராட்டங்கள் வெடித்தன. அந்த போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கிபோராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசு ஹிஜாப் சட்டங்களையும் கடுமையாக்கியது.

துருக்கி விமான நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக காவல்துறைக்கு தெரியவந்தது.

எனவே பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்து பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. ஈரான் காவல்துறையினர் விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்ற அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.